அழகை மெரூகூட்ட உதவும் தேயிலை

red-cup-with-tea-and-beautiful-girl-drinking-itடீ பிடிக்காதவர்கள் மிக குறைவே. எல்லாருக்கும் டீ என்றால் மிகவும் பிடிக்கும். குடிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்று நம்பப்பட்ட டீயில்

தற்பொழுது தோளுக்கும் கூந்தலுக்கும் தேவையான சத்துக்கள் இருப்பதாக பல தகவல்கள் வருகின்றன. தேயிலை தோட்டங்கள் அதிகரித்து டீக்கு பஞ்சம் இல்லை என்ற நிலைமை நம் நாட்டில் உள்ளது. அப்படி பட்ட டீயில் பல நன்மைக் கூறுகள் உள்ளன. டீயின் தன்மை கூந்தளையும் தோளையும் மிருதுவாகவும் நல்ல தன்மை நிறைந்ததாகவும் காண வழி செய்கின்றது. இந்த டீயை கொண்டு கண்களுக்கு கீழ் காணப்படும் கருவளையத்தை போக்கலாம், கால்களை மிருதுவாக்கலாம். தோலுக்கு மிருது தன்மையையும் கூந்தலுக்கு பொலிவையும் கொடுக்கும் இந்த டீ விலையில் குறைந்து அனைவராலும் பயன்படுத்தும் அளவில் உள்ளது. எளிய முறையில் உங்களை அழகாக்க டீயை தேர்வு செய்யுங்கள். அதை பற்றி இங்கு காண்போம்.
ஈரப்பதம் தேவை

சருமம் வரண்டு காணப்பட்டால் அதை சரிசெய்ய வேண்டும். அதற்கு வறண்ட சருமத்தின் மீது சிறிது சில்லென்ற கிரீன் டீயை தெளிக்க வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்கு போவதுடன், சருமத்திற்கு தேவையான பளப்பளப்பையும் கொடுக்கும்.

கண்களுக்கு கீழ் வீக்கம் மற்றும் கருவளையம்

கண்களுக்கு கீழ் வீக்கம் இருப்பின் அதை சரிசெய்ய வேண்டும். அதற்கு வீட்டில் டீ பையை தூக்கி எரிய வேண்டாம். அதை அப்படியே கண்களுக்கு கீழ் வைத்தால் போதும் கருவளையம் நீங்கிவிடும். ஏனெனில் டீயில் உள்ள காப்ஃபைன், கண்களுக்கு கீழ் உள்ள வீக்கத்தையும், கருவளையத்தையும் போக்கி விடும்.

கூந்தலின் தன்மையை பாதுகாக்கும்

ப்ளாக் டீ அல்லது கிரின் டீயை கொண்டு கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் தன்மை மிருதுவாகவும், சுத்தமாகவும் மாறும். அதிலும் ஷாம்பு போட்டு குளித்தவுடன், இந்த முறையை செய்து கண்டிஷன் செய்வது மிக மிக அவசியமாகின்றது.

கால்களில் துர்நாற்றம் வராமல் பார்த்து கொள்ளும்

காலில் இருந்து வரும் ஒரு வித நாற்றம் உங்கள் நம்பிக்கையை கெடுத்து விடும். காண்பவர்கள் முகம் சுளிக்க நேரிடும். இதற்கு தீர்வு கொதிக்க வைத்த டீ டிக்காஷனில் காலை ஊரவைப்பதுதான். இதனால் கால் மிருதுவாவதுடன் நாற்றம் இல்லாமலும் இருக்கும். கால்களின் வெடிப்புகளும் இதனால் மூடிவிடும்.

ஷேவிற்கு பின் மென்மை

ஷேவ் செய்த பின் உங்கள் கால்கள் வரண்டும் எரிச்சலோடும் காணப்படும். அப்பொழுது டீ டிக்காஷ்னில் ஊர வைத்தால் போதும் உடனடி தீர்வு கிடைக்கும்.


Warning: Invalid argument supplied for foreach() in /home/tamilxnews/public_html/wp-content/themes/tamilxnews/single.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *