நைஜீரியாவில் மனித இறைச்சி விற்பனை; 11 பேர் கைது

Human-meetநைஜீரியாவில் மனித மாமிசத்தை விற்பனை செய்த ஹோட்டல் உரிமையாளர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Human meetநைஜீரியாவின் அனம்ப்ரா மாநிலத்தில் உள்ள ஒனிட்ஷா நகரில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் மனித மாமிசம் சமைத்து விற்பனை செய்யப்படுவதாக உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் நேற்று காலை அந்த ஹோட்டலுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஹோட்டலில் மனித மாமிசம் சமைத்து விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹோட்டலில் 2 பிளாஸ்டிக் பைகளில் 2 மனித தலைகள், 2 ஏகே 47 ரக துப்பாக்கிள், பிற ஆயுதங்கள், செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ஹோட்டல் உரிமையாளர், 6 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் என மொத்தம் 11 பேரை போலீசார் கைது செய்தனர். பிரபல ஓஸே-ஒக்வொடு மார்க்கெட் அருகில் இருக்கும் அந்த ஹோட்டலுக்கு வரும் ஆட்களை பார்த்தும், அங்கு அதிக விலைக்கு இறைச்சி விற்பதையும் பார்த்து சந்தேகம் அடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது


Warning: Invalid argument supplied for foreach() in /home/tamilxnews/public_html/wp-content/themes/tamilxnews/single.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *