கையடக்கத் தொலைபேசிகளுக்கு இருதய துடிப்பின் மூலம் சக்தி

Untitled-121பாவ­னை­யா­ள­ரது இரு­தய துடிப்பால் சக்தியூட்­டப்­பட்டு செயற்­ப­டக்­கூ­டிய பொருத்தக் கூடிய பற்­ற­ரி­யொன்றை விஞ்­ஞா­னிகள் அறி­மு­கப்­ப­டுத்தியுள்­ளனர்.மேற்­படி பற்­ற­ரி­யா­னது எதிர்­கால கைய­டக்கத்தொலை­பே­சி­க­ளுக்கு சக்­தி­யூட்­டு­வ­தற்கு மின்­னேற்றி உப­க­ர­ணங்­களை (சார்ஜர்)எடுத்துச் செல்ல வேண்­டிய அவ­சி­யத்தை நீக்­கு­வதாக அமை­கி­ற­து.

அமெ­ரிக்க மற்றும் சீன விஞ்­ஞா­னி­களால் அறி­மு­கப்­ப­டுத்தப்பட்­டுள்ள இந்த பற்­றரி இரு­தயம், நுரை­யீரல் மற்றும் பிரி­மென்­ற­கடு போன்ற உறுப்­பு­களின் தொடர்ச்­சி­யான அசைவை மின் சக்­தி­யாக மாற்­று­கி­றது.

ஏற்­க­னவே இத்­த­கைய பற்­றரி இதய இயக்க உப­க­ர­ண­மொன்­றுக்கு சக்­தி­யூட்ட பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த சிறிய நெகிழ்ச்­சித்­தன்­மை­யுள்ள பற்­ற­ரியை பசுக்­களில் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­திய போது, அது இருதய இயக்க உப­க­ர­ண­மொன்றை செயற்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான அளவு சக்­தியைக் கொண்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

இந் நிலையில் மேற்­படி பற்றரியை எதிர்காலத்தில் பலதரப்பட்ட கையடக்க தொலைபேசிகளுக்கும் சக்தியூட்ட பயன் படுத்துவ­தற்­கு விஞ்ஞானிகள் திட்ட மிட்டுள்ளனர்.


Warning: Invalid argument supplied for foreach() in /home/tamilxnews/public_html/wp-content/themes/tamilxnews/single.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *