புயலால் வீட்டுக்குள் வந்த குதிரை வீட்டைவிட்டு வெளியேற மறுப்பு –

003a3புயலிலிருந்து பாதுகாப்பதற்காக தனது குதிரையை வீட்டுக்குள் எடுத்த உரிமையாளர் ஒருவர் சங்டகத்திற்கு ஆளாகியுள்ள சம்பவமொன்று ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

ஸ்டெபானி ஆர்ண்ட் என்பவர் நஸார் எனப் பெயரிடப்பட்ட குதிரையை வளர்த்து வருகிறார். ஜேர்மனியின் வடக்குப் பகுதியில் ஹோல்ட் நகரில் இவர் வசிக்கின்றார்.

இப்பகுதியில் நிலவிவந்த சீரற்ற காலநிலையிலிருந்து தனது குதிரைய பாதுகாக்க அதனை வீட்டினுள் எடுத்துள்ளார்.

பின்னர் காலநிலை சீரானதையடுத்து குதிரையை வெளியில் அனுப்ப முயற்றிச்சித்துள்ளார் ஸ்டெபானி. ஆனால் குதிரையோ வீட்டைவிட்டு வெளியேற மறுக்கிறதாம்.

‘நஸாருக்கு காற்று, மழை பிடிக்கவில்லை. மனித ஆடம்பர வாழ்க்கையை அது விரும்புகிறது. அத்துடன் மனித ரசனைகளுக்கு அது பழக்கப்பட்டுவிட்டது.

தற்போது இனிப்பு பண்டங்களையும், பழ ரசங்களையும் விரும்புகிறது. அதேவேளை கீபோர்ட் இசைக்கவும் செய்கின்றது’ என்கிறார் அதன் உரிமையாளர் ஸ்டெபானி.

இருப்பினும் அக்குதிரை வீட்டைவிட்டு வெளியேற்ற தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்கிறார் ஸ்டெபானி.

ஆனால் இம்முயற்சி எப்போது கைகூடும் எனத் தெரியவில்லையாம்.

 


Warning: Invalid argument supplied for foreach() in /home/tamilxnews/public_html/wp-content/themes/tamilxnews/single.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *