காதலிகளுக்கு சில விஷயங்கள்

17loveபொதுவாகவே காதலில் பல வகை உண்டு. இரு மனங்கள் ஒத்து, ஒருவர் இல்லாமல் மற்றொருவர் வாழ முடியாது என்ற நிலையில் ஏற்படும் உன்னதமான காதல்கள் ஏராளம். அதே சமயம், நாம் காதலிக்கும் நபர், நம்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருத வேண்டும் என்றால், நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதாவது,

காதலிகள் பெரும்பாலும், தனது காதலர்கள் மிகவும் விரும்பும் (உதாரணமாக, கிரிக்கெட் ஆடுவது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது..) என சில விஷயங்களை செய்யவேக் கூடாது என்று தடை விதிப்பார்கள். அவ்வாறு இல்லாமல், காதலுக்காக அவரை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்று கூறுங்கள். (ஆனால், அவரை அப்படி விடப்போவதில்லை என்றாலும், சொல்லி வையுங்கள்.)

உங்களுடன் அவர் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் போது குறுக்கே பேசாதீர்கள்… (அதுக்குத்தான் அவருக்கு பேச வாய்ப்பே கொடுக்கிறதில்லையே)

உங்கள் காதலரின் மிகப்பெரிய ரசிகையாக நீங்கள் இருப்பதை போல பாவனை செய்யுங்கள்.

அவர் விரும்பி கேட்கும் பாடல்களை நீங்களும் விரும்பி கேட்பதாகக் கூறுங்கள். அவருக்குப் பிடித்த விஷயங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், பிடிக்கும் என்றே கூறுங்கள்.

காதலர் மொக்கை ஜோக் சொன்னாலும், விழுந்து விழுந்து சிரியுங்கள். ஒரு வேளை உங்களால் அவரது நகைச்சுவை உணர்வு இன்னும் அதிகரிக்கலாம்.. யார் கண்டது.

ஆண்கள் பொதுவாகவே மரியாதையை எதிர்பார்ப்பவர்களாக இருப்பார்கள். அதனால், மரியாதையாக நடத்துங்கள்…(முடியவே முடியாதே… என்ன பண்றது..)

காதலிப்பவரை முழுமையாக நம்புங்கள்.. குறைந்த பட்சம் நம்புவதாகக் கூறுங்கள்.

அவர் அசதியாக இருக்கும் போது.. ஊர் சுற்ற வேண்டும் என்று அழைக்காதீர்கள். ஓய்வெடுக்க அனுமதியுங்கள்.

அவர் பேசும் போது ஆர்வத்தோடு கேட்பதைப் போல பாவனை செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *