தன்னை ஏமாற்றிய காதலனின் பெயரை பச்சை குத்திய தோல் பகுதியை வெட்டி தபாலில் அனுப்பிய பெண்

003b1தனது காதலன் தன்னை ஏமாற்றியதை அறிந்ததும் ஆத்திரத்தில் அவரது பெயரை பச்சை குத்திக்கொண்ட தோல் பகுதியினை வெட்டி அதனை காதலனுக்கு தபால் மூலம் அனுப்பிய சம்பவமொன்று கடந்த வாரம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

26 வயதான டோர்ஷ் றினோல்ட்ஸ் என்ற பெண்ணே தனது காதலனான 24 வயதான ஸ்ருவேர்ட் என்பவருக்கு பச்சை குத்திய பகுதியை வெட்டி அனுப்பியுள்ளார்.

இவர்கள் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனக்கு பிடித்தமான தொழிலுக்hக அமெரி;க்காவின் அலஸ்காவுக்கு செல்லப்போவதாகக் கூறியுள்ளார் ஸ்ருவேர்ட். விமானநிலையத்தில் வைத்து கண்ணீருடன் விடைபெற்றுள்ளார்.

ஆனால் சில வாரங்களில் ஸ்ருவேர்ட் மற்றுமொரு பெண்ணுடன் இங்கிலாந்திலேயே சுற்றுவதையும் அவர்களுக்குள் 6 மாதங்களாக தொடர்பு இருந்ததையும் அறிந்துள்ளார் றினோல்ட்ஸ்.

இதனால் ஆத்திரதமடைந்து ஸ்ருவேர்ட்டின் செல்லப்பெயரான ‘சொப்பர்’ என்பதை பச்சை குத்திய தனது கையின் தோல் பகுதியை வெட்டி அவருக்கே தபால் மூலம் அனுப்பி பழி தீர்த்துக்கொண்டுள்ளார்.

‘பச்சை குத்திய பகுதியை சுமார் ஒன்றை மணித்தியாலங்களாக பொறுமையாக வெட்டி அதனை பரிசுப்பொருள் போன்று பொதியாக்கி தபாலில் அனுப்பினேன். எனது கையெழுத்தையும் வேறு விதமாக எழுதினேன். எனவே இப்பொதி என்னுடையது என சொப்பரினால் அடையாளம் கண்டிருக்க முடியாது.

சொப்பரின் இதனை எவ்வாறு எதிர்கொண்டிருப்பார் என நினைத்துப்பார்க்க முடியவில்லை. அப்போது நான் அங்கு இருந்திருக்க ஆசைப்படுகின்றேன்.

பச்சையை வெட்டி அகற்றுவது கடினமானது. ஆனால் தோல் மறுபடியும் வளர்ந்துவிடும்’ என்கிறா றினோல்ட்ஸ்.

 


Warning: Invalid argument supplied for foreach() in /home/tamilxnews/public_html/wp-content/themes/tamilxnews/single.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *