நெடிலடிக் கவிகள்

imagesஐந்து சீரானமைந்த கவிவடிவமே
நெடிலடி என்பதாகும்
ஒரு அடியில் ஐந்து சீர்கள் என்பதை மாற்றி ஐந்து சீர்களில் அழகிய கவியினை தருவதே இதன் புதுவடிவம் . என்னுடைய
கவிப்பரிசோதனை முயற்சியில் இதுவும் ஒன்றாகும்.
அதாவது இக்கவி வடிவம் கீழிருந்து மேலோ,
மேலிருந்து கீழோ
எந்தப் பக்கம் இருந்து வாசித்தாலும்
ஒரே பொருள் தருவதாகவே அமைந்திருக்கும்.
அந்த வகையில் இக்கவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதில் சிலவற்றைத் தருகிறேன்.
எனது முயற்சியை வழிப்படுத்தட்டும்
உங்கள் கருத்துக்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

சட்டங்கள் தூக்குமேடையில்
மனிதன்
பாழடைந்த நீதிமன்றில்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

யாசகம் கேட்கிறான்
வாக்குளை
பிச்சைக்காரன் பாணியில்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

போதிமரங்களும் கடத்தப்படுகிறதாம்
புத்தரோடு
இலாவகமாகிறது வாணிபம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குழந்தைக்குப் பாலில்லை
வாயினில்
தாய்க்குத் தண்ணீரில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வானத்தின் நிலவுக்கும்
தெரியாது
பூமிநிலா இவளென்று

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புலரவில்லை பொழுது
சிரித்துவிடு
மலரவில்லை மலர்கள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நைல்நதி போல்
நீட்டமானது
அவள் கூந்தலும்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(( உதாரணமாக மேலுள்ள கவிதையை

அவள் கூந்தலும்
நீட்டமானது
நைல்நதி போல்

என்று மாற்றிப் படித்தாலும் அதே பொருளையே இக்கவி தரும் .))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *