எளிய மருத்துவ குறிப்புக்கள்

40a380c8-d241-4d02-8acf-ad1e53fb94e4_S_secvpfஉடல் எடை கூடஅதிகரிக்க:

பூசினி விதையின் பருப்பை எடுத்து நன்கு பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

இரத்த கடுப்புக்கு:

மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை அனைத்தும் குணமாகும்.

வெளுத்த தலை முடி கறுக்க:

கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் தொடர்ந்து பூசி வந்தால் தலை முடி கறுத்து வளரும்.

தொண்டை இரும்பல் தீர:

கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டு வந்தால் தொண்டைஇரும்பல் நிவர்த்தியாகும்.

வண்டுகடிக்கு:

வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய அனைத்தையும் அரைத்த விழுதை எலுமிச்சை அளவு எடுத்து பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

உடல் சூட்டுக்குத் தைலம்:

அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமமான அளவு எடுத்து சூடுபடுத்தி அதில் வெந்தயத்தை பால் எடுத்து சேர்த்து தைல பதமாக காய்ச்சி அதை தலையில் தோய்த்து வந்தால் சகல சூடுந்தணியும். தேகம் குளிர்ச்சியாகும்.

மூலம் தீர்க்கும் ஆவாரை:

ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் குழைத்து உண்டுவர உள்மூலம் தீரும்.

கைநடுக்கம் தீர:

தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலை மாலை இரு வேளை பசும்பாலில் 15 நாள் தொடர்த்து சாப்பிட வர இந்த பிரச்சினை தீரும்.

இருமல் தீர:

இலவங்கப்பட்டை 1ஸ்பூன் , வால்மிளகு 1 / 4 ஸ்பூன்பொடித்து 3 வேளை நெய்யில் குழைத்து சாப்பிட்டு தர இருமல் தீரும்.

காதில் சீழ் வருதல் தீர:

இந்துப்பு, சுக்கு சமஎடை எடுத்து பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *