பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

eb38a639-3085-46f7-b0b2-82e37b8e7eee_S_secvpfஆரோக்கியமாக வாழ விரும்பும் பெண்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்.

1. காலை உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அது பெண்கள் உடலுக்கு மிக அவசியம். இட்லி, இடியாப்பம், தோசை போன்றவைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்து தானியங்கள், பச்சை காய்கறிகள் ஆகியவைகளோடு ஒரு கப் பழச்சாறு, வேகவைத்த முட்டை, பால் அல்லது தயிர், சிறிதளவு கொழுப்பு கலந்த உணவு ஆகிய அனைத்தும் காலை உணவில் இடம்பெறவேண்டும். இந்த சரிவிகித சத்துணவை ஒரே நேரத்தில் சாப்பிட முடியாதவர்கள் சிறிதளவு இடைவெளி விட்டு சாப்பிடவேண்டும்.

2. பெரும்பாலான பெண்கள் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். இந்த தொல்லை அவர்களை அன்றாட வேலைகளை செய்யவிடாமல், உற்சாகமில்லாமல் ஆக்கிவிடுகிறது. முதுகு வலியை தவிர்க்க ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சி தினமும் செய்யவேண்டும். இதன் மூலம் உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகரிக்கும். தசைகள் நெகிழ்ச்சியாகும். எலும்புகளும் வலுவாகும். நாள் முழுக்க உற்சாகம் கிடைக்கும்.

3. தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும். இது ரத்தத்தை சுத்தி செய்து, உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும். சரும அழகிற்கும் தண்ணீர் பருகவேண்டியது அவசியம். சிறுநீர் பாதை தொற்றுகளை அகற்றவும் பெண்கள் அதிகம் தண்ணீர் பருகவேண்டும்.

4. கிரீன் டீ சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ பருகுவது நல்லது. இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்தின் அழகிற்கும் ஏற்றது.

5. பெண்களுக்கு 30 வயதுக்கு பிறகு எலும்பின் அடர்த்தி குறையத் தொடங்கும். தினமும் படுக்கச் செல்லும் முன்பு ஒரு கப் பால் பருகுங்கள். டாக்டர் அனுமதியோடு தினமும் ஒரு கால்சியம் மாத்திரை சாப்பிடலாம். பால் மற்றும் பால் வகை பொருட்களில் இருக்கும் கால்சியம் மட்டும் போதாது, காய்கறிகளில் இருக்கும் கால்சியமும் உடலுக்கு தேவை. தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் 200 மி.கி. கால்சியம் உடலுக்கு தேவைப்படுகிறது. சோயா மில்க் மற்றும் சோயா வகை உணவுப் பொருட்களிலும் கால்சியம் அடங்கியிருக்கிறது.

6. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். குறைந்தால் மனோநிலை சீர் கேடு தோன்றக்கூடும். எளிதாக ஜீரணமாகக்கூடிய பிஸ்கெட், சாக்லேட் போன்றவைகளை உடனடியாக சாப்பிடும் விதத்தில் வைத்திருப்பது நல்லது. எலுமிச்சை சாறும், உப்பும் கலந்த நீரையும் அவ்வப்போது பருகி வரலாம்.

7. வைட்டமின் சி சத்து தினமும் உடலுக்கு தேவைப்படுகிறது. எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களிலும், காய்கறிகளிலும் இந்த சத்து இருக்கிறது. தினமும் 90 மி.கி. வைட்டமின் சி உடலுக்கு தேவைப்படுகிறது. மேற்கண்ட பழங்கள் சாப்பிட கிடைக்காவிட்டாலும், தினமும் ஏதாவது ஒரு வகை ஜூஸ் பருகுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *