நட்பு காதலாக மாறலாமா

நிச்சியமாக நட்பு காதலாக மாறுவது தவறில்லை நண்பர்களே, எப்போதென்றால் அது உண்மையான காதலாக மாறும் போது. நல்ல நண்பர்களுக்கிடையில் நிச்சியமாக ஒரு ஆழ்ந்த புரிந்துண்ர்வு இருக்கும்,

புரிந்துணர்வு மட்டுமல்ல, விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை, தோள் கொடுக்கும் பாண்மை, எதையும் எதிர்பாரா மனம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். மற்றும் இங்கே இருவருடைய பலம் பலவீனங்கள் குறைபாடுகளை இருவரும் அறிந்து வைத்திருப்பதால் பின்னரான பரிவினைகள் ஏற்படாது.

cheri-si-on-faisait-une-therapie.jpg

சிறந்த காதலுக்கு இவை இயற்கையாகவே வித்திடும்,
காரணம் உண்மையான காதலின் அடிப்ப்டைகளும் இவை தான்…..(இதில் எந்த ஒரு ஐயமும் இல்லை….)
ஆனாலும் உன்மையாக நட்புடன் பழகும் போது அங்கு ஒருவருக்கு காதல் தோன்றினால், அது அந்த நட்பிற்கு செய்யும் துரோகம் இல்லையா?? என்று நம் மனதில் அடிக்கடி கேள்விகள் அலை மோதுவது சகஜம்.
நண்பர்களே ! இங்கு நான் சொல்ல வரும் காதலை இதோ இந்த கவியில் விளக்குகிறேன்…..

நட்பு காதலாக மாறலாமா

என்னை விட

நல்ல நண்பனை
நீ கண்டுபிடித்தால்
என்னைக் கடந்து செல்..
நான் உன்னை
தடுக்க மாட்டேன்..
ஆனால், அவன்/அவள்
உன்னை விட்டு
விலகிச் சென்றால்
பின்னால் திரும்பி பார்.
அங்கே உனக்காக
நான் இருப்பேன்…

எந்த ஒரு நட்பு காதலாக மாறும் போது கவியில் கூறிய இந்த நிலையை ஏற்று நிற்கிறதோ… நிச்சியமாக அந்த காதல் அந்த நட்புக்கு செய்யும் துரோகமாக ஒரு போதும் திகழாது. மாறாக அந்த நட்பு ஆயுள் வரை வாழ வித்திடுகிறதல்லவா?

நட்பு காதலாக மாறுவது தவறில்லை ஆனாலும் (நாம் புரிந்து கொள்ள வேண்டியது) நட்பே காதலை விட மேலானது…
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள்
காதலர்கள்
இதயத்தையே இடமாக கொடுப்பவர்கள்
நண்பர்கள்.

காதல் புனிதமானது தான்,
காதலின் அடிப்படை நட்பே!! ஆக
அதனிலும் (காதலினும்) புனிதமானது நட்பு

இங்கே நட்பையும் காதலையும் ஒப்பிட்டு நோக்கும் போது பின்வரும் கவி ஓரளவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்..

ஆபத்தில் தன்

உயிர் கொடுத்து
நண்பனை
காத்திடுவது
நட்பு…

அன்புக்குரியவரின்
அழிவு கண்டு
மனம் ஆற்றாது
தானும்அழிந்து
போவது
காதல்…

அந்த வகையில் நட்பு காதலாக மாறுவதென்பது என்றும் தவறாக மாறாது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *