வேலைக்கார பெண்ணுடன் கள்ள தொடர்பு : வீடியோவை வெளியிட்ட மனைவி

வேலைக்காரியுடன் உல்லாசமாக இருந்த கணவரின் செயல்களை படம் எடுத்த குற்றத்திற்காக மனைவி ஜெயில் தண்டனை அனுபவிக்க காத்திருக்கும் சம்பவம், சவுதி அரேபியாவில் நடந்துள்ளது.சவுதி அரேபியாவை சேர்ந்த பெண், தனது கணவர், வேலைக்கார பெண்ணுடன் சரசத்தில் ஈடுபடுவதை கவனித்துள்ளார். இதை கையும் களவுமாக பிடிப்பதற்காக, செல்போன் கேமராவை கிச்சன் பக்கமாக பொருத்தி வைத்துள்ளார்.அவர் எதிர்பார்த்தபடி, கணவர், வீட்டு வேலைக்கார சில்மிஷம் செய்தது மொபைலில் பதிவாகிவிட்டது. டிப்டாப்பான அந்த வேலைக்கார இளம் பெண், பேண்ட், சட்டை அணிந்துள்ளார். ஆடையின் மீது கை வைத்து, வேலைக்கார பெண்ணின் மர்ம உறுப்பை தொட்டு சில்மிஷம் செய்யும் அளவுக்கு கணவன் அத்துமீறியது அதில் பதிவாகியுள்ளது.

வேலைக்கார பெண்ணின் உதட்டோடு உதடு பதித்து அந்த ஆண் முத்தமிடுவதும் சிக்கியுள்ளது. இந்த அதிர்ச்சி தரும் வீடியோவை பார்த்து தனது கணவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவேற்றம் செய்த அந்த பெண், இதுதான் எனது கணவருக்கு என்னால் தர முடிந்த சிறு தண்டனை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், பிறரது அந்தரங்கத்தை சமூக வலைத்தளத்தில் அம்பலப்படுத்துவது சவுதி அரேபியாவில் குற்றச்செயலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அந்த மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டு சட்டப்படி, இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *