மனைவிக்கும் மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு : மனைவியின் தலையை வெட்டி தெருவில் கொண்டு சென்ற கணவன்

தன் மனைவியின் தலையை வெட்டி, அந்த தலையை கையில் ஏந்தியவாறு பாதையில் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த முதியவரின் மனைவிக்கும் அவரின் மருமகனுக்கும் (மகளின் கணவன்) கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

மனைவியை பலமுறை அவர் எச்சரித்தும் அவரின் மனைவி பேச்சைக் கேட்கவில்லை.

இந்நிலையில், நேற்று (9) வீட்டிற்கு திடீரென சென்றிருக்கிறார் குறித்த நபர்.

வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்பாள் போடப்பட்டிருந்ததால் நெடுநேரமாக கதவைத் தட்டிய பின்னரே மனைவி கதவை திறந்திருக்கிறார்.

கதவு திறந்ததும் வீட்டின் உள்ளே இருந்த அவரது மருமகன் இவரைக் கண்டதும் ஓடிவிட்டார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற குறித்த நபர் மனைவிய அடித்து உதைத்து அருகிலிருந்த கோடாரியை எடுத்து கழுத்தில் வெட்டியிருக்கிறார். அதில் அவரின் தலை துண்டானது.

515743667India.jpg

துண்டான தலையை ஒரு கையிலும், வெட்டியை கோடாரியை இன்னொரு கையிலும் பிடித்தவாறு பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருக்கின்றார் இந்த முதியவர்.

அவர் அப்படி பாதையில் செல்வதை பார்த்தவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

இந்த சம்பவம் புனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *