5000 பேருடன் உடலுறவுகொண்ட பிர­பல நடி­கருக்கு எயிட்ஸ்

அமெ­ரிக்­காவின் பிர­பல நடி­கர்­களில் ஒரு­வ­ரான சார்ளி ஷீன், தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்­ப­தாக ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

பிளேபோய் பாணி வாழ்க்கை வாழ்ந்த நடிகர் சார்ளி ஷீனுக்கு எயிட்ஸ் நோயை ஏற்­ப­டுத்தும் எச்.ஐ.வி. ஏற்­பட்­டி­ருப்­பது உறு­தி­யா­கி­யுள்­ள­மையால் ஹொலிவூட்டில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

தாம் 5000 பெண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக முன்னர் கூறி­யவர் சார்ளி ஷீன். இந்­நி­லையில், அவர் மூலம் பெண்கள் பல­ருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்­பட்­டி­ருக்­குமோ என அஞ்­சப்­ப­டு­கி­றது.

ஹொலிவூட்டின் பிர­பல நடி­கர்­களில் ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அவர் பல வரு­டங்­க­ளாக இதை மறைத்­து­ வந்­துள்­ள­தா­கவும் கடந்த வாரம் அமெ­ரிக்க பத்­தி­ரி­கை­யொன்று செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

இத்­த­க­வ­லினால் அவ­ருடன் சம்­பந்­தப்­பட்ட பெண்கள் பலர் அச்சம் கொண்­டுள்­ள­தாக சில ஊட­கங்கள் தகவல் வெளி­யிட்­டன.

எச்.ஐ.வி. தொற்­று­டைய அந்த நடிகர் சார்ளி ஷீன் எனவும், தான் எச்.ஐ.வி. தொற்­று­டை­ய­வரா என்­பது குறித்து அவர் செய்­வாய்க்­கி­ழமை தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யொன்றில் கலந்­து­கொண்டு அறி­விக்­க­வுள்ளார் எனவும் கடந்த திங்­கட்­கி­ழமை அறி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில், நேற்­று­ முன்­தினம் செவ்­வாய்­க்கி­ழமை என்.பி.சி தொலைக்­காட்­சியின் “டுடே” நிகழ்ச்­சியில் பங்­கு­பற்­றிய நடிகர் சார்ளி ஷீன் தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருக்­கி­றது என ஒப்­புக்­கொண்டார்.

4 வரு­ட­கா­ல­மாக, அதா­வது 2011 ஆம் ஆண்­டி­லி­ருந்து தனக்கு எச்.ஐ.வி. உள்­ள­தாக அவர் கூறினார். எனினும், அது எயிட்ஸ் நோயாக முற்­ற­வில்லை எனவும் அவர் தெரி­வித்தார்.

50 வய­தான சார்ளி ஷீன், திரைப்­ப­டங்கள் மற்றும் தொலைக்­காட்­சி­களில் தனது சிறந்த நடிப்பால் புகழ்­பெற்­ற வர்.

அதே­வேளை, திரை­யு­ல­குக்கு அப்பால் அவரின் தனிப்­பட்ட வாழ்க்கை சர்ச்சை மிகுந்த­தாக இருந்­தது. போதைப் பொருள் குற்­றச்­சாட்­டுகள், பெண்கள் விவ­கா­ரங்­களால் செய்­தி­களில் இடம்­பெற்­றவர் இவர்.

3 தடவைகள் இவர் திரு­ம ணம் செய்­தி­ருந்தார்.

முதல் தட­வை­யாக டொனா பீலை 1995 ஆம் ஆண்டு திரு­மணம் செய்து ஒரு வரு­டத்தில் விவா­க­ரத்து பெற்றார்.

பின்னர் டெனிஸ் ரிச்­ச­ர்ட்ஸை 2002 ஆம் ஆண்டு திரு­மணம் செய்தார். 2006 ஆம்­ ஆண்டு இவர்கள் பிரிந்­தனர்.

இறு­தி­யாக 2008 ஆம் ஆண்டு புரூக் முல்­லரை திருமணம் செய்த சார்ளி ஷீன், 2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

ஆனால், இப்பெண்கள் மூவரும் சார்ளி ஷீனின் வாழ்க்கையில் தொடர்புபட்ட பெண்களின் எண்ணிக்கையில் மிகச் சிறிய பகுதியினரேயாவர்.

தான் 5000 பெண்­க­ளுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக சில வரு­டங்­க­ளுக்­கு முன் சார்ளி ஷீன் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அந்த 5000 பேர் யார் என்­பது தெரி­யா­விட்­டாலும் குறைந்­த­பட்சம் 22 பிர­ப­ல­மான பெண்கள் உள்­ள­தாக குறிப்­பிட்­டி­ருந்த ஊட­கங்கள் அவர்­களின் விப­ரங்­க­ளையும் வெளி­யிட்­டி­ருந்­தன.

சார்ளி ஷீனுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்­ப­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 2011 ஆம் ஆண்டு காலத்தில் அவரின் காத­லி­யாக விளங்­கி­யவர் முன்னாள் ஆபா­சப்­பட நடி­கை­யான ப்றீ ஒல்சன்.

தற்­போது சார்ளி ஷீனுக்கு எச்.ஐ.வி. இருப்­ப­தாக அவர் ஒப்­புக்­கொண்­ட­தை­ய­டுத்து ப்றீ ஒல்சன் முத­லானோர் கடும் விசனம் தெரி­வித்­துள்­ளனர்.

ஒரு வரு­ட­கா­ல­மாக சார்ளி ஷீன் தன்­னுடன் வசித்து, ஏறத்­தாழ தின­மும் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­போ­திலும் அவர் ஒரு­போதும் தனக்கு எச்.ஐ.வி. தொற்­றி­யுள்­ளதை வெளிப்­ப­டுத்­த­வில்லை என ப்றீ ஒல்சன் கூறி­யுள்ளார்.

எனினும் தனக்கோ 6 வயது இரட்­டை­யர்­க­ளான தனது மகன்­க­ளுக்கோ எச்.ஐ.வி. ஏற்­ப­ட­வில்லை என சார்­ளியின் முன்னாள் மனைவி புரூக் முல்லர் தெரி­வித்­துள்ளார்.

எச்.ஐ.வி. தொற்­றி­யி­ருப்­பதை வெளிப்­ப­டுத்­தாமல் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வது தண்­ட­னைக்­கு­ரிய குற்றம்.

இந்­நி­லையில் சார்ளி ஷீன் இது குறித்து கூறாமல் பல­ருக்கு எச்.ஐ.வி. தொற்றை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்பார் என சிலர் குற்றம் சுமத்­து­கின்­றனர்.

ஆனால், தன் மூலம் மற்­ற­வர்­க­ளுக்கு எச்.ஐ.வி. தொற்­றி­யி­ருக்கும் என தான் கரு­த­வில்லை என சார்ளி ஷீன் கூறு­கிறார்.

அதே­வேளை, தனக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்­பட்­டி­ருப்­பதை அறிந்­து­கொண்ட சிலர் இத்தகவலை வெளியிடாமல் இருப்பதற்காக ஒரு கோடி அமெரிக்க டொலர் வரை தன்னிடம் பணம் கறக்க முயன்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *