பிணத்துடன் உடலுறவு கொண்ட காம கிறுக்கன்

சவூதி வைத்தியசாலையொன்றின் பிண அறையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் இறந்த பெண் ஒருவரின் சடலத்துடன் உடலுறவு கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பங்காளதேசைச் சேர்ந்த சாகிர் என்ற 33 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்திய சாலையின் ஏனைய ஊழியர்கள் பின்னிரவு நேரத்தில் கடமை நிறைவடைந்து திரும்பும் நிலையில் குறித்த நபர் பிண அறையில் பதுங்கியிருந்தே மேற்படி குற்றச் செயலினைப் புரியும் போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் மேற்கு மாகாண நகரங்களில் ஒன்றான மக்காவிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த வைத்தியசாலையின் சக ஊழியர் ஒருவர் சந்தேகநபரை மடக்கிப் பிடித்துள்ளதுடன் அவரது முகத்தில் பல முறை அறைந்துள்ளார். இதனை அடுத்து வைத்தியசாலை நிர்வாகம் குறித்த நபரை பொலிசாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிய வருகிறது.

குறித்த பங்களாதேசை சேர்ந்த ஊழியர் பிணங்களுடன் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்வது இது முதன் முறை அல்ல என்பதும் ஏற்கனவே பல முறை இவ்வாறு அநாகரீகமாக பிண அறையில் நடந்து கொண்டுள்ளமையும் பொலிசாருக்கு அளித்த வாக்குமூலத்திலிருந்து தெரிய வந்துள்ளது.

சவூதி அரேபியாவை பொறுத்தவரை இவ்வாறானதொரு சம்பவம் பதிவாவது இதுவே முதன் முறையாகும்.
இந் நிலையில் அனைத்து வைத்திய சாலைகளினதும் பிணவறைகளை கண்காணிக்கும் விதமாக கண்காணிப்பு கமராக்களை பொருத்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றங்கள் தொடர்பில் இறுக்கமான சட்டங்களை கொண்டுள்ள சவூதியில் குறித்த நபருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *